பக்கம்:வாழும் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

54 வாழும் தமிழ்

குழங்தை தாயைப் பார்த்து, 'அம்மா உன்னை என் க ல் ய | ண த் து க் கு க் கூப்பிடமாட்டேன்’ என்றதாம்.

தாய், "ஏன் அப்பா?’ என்று கேட்டாள்.

‘'நீ உன் கல்யாணத்துக்கு என்னேக் கூப்பிட் டாயோ?” என்று கேட்டது குழங்கை.

கேள்வியைக் கேட்ட தாய் சிரித்து மகிழ்கிருள். குழங்தைத் தன்மையாகையால் அந்த மகிழ்ச்சி

உண்டாகிறது. பெரியவனுகி அதே கேள்வியைக் கேட்டால் மகிழ்ச்சி தோன்றுமா?

சங்தேகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் பைத்தியக்காரத்தனத்தை .ெ வ எளி ப் படுத் தா ம ல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற கவலே இலக்கணக் காரருக்கு உண்டாகி இருக்கிறது.

ஒருவருக்குக் கண் கொஞ்சம் மங்கல். நெடுங் தூரத்தில் யாரோ வருகிருர். அவர் கடந்து வருகிறது கெரிகிறதே ஒழிய ஆணு பெண்ணு என்று தெரியவில்லை. அருகிலுள்ள பையனேக் கேட்கிரு.ர். எப்படிக் கேட்பார்? எப்படிக் கேட்பது சரி?

'அதோ வருகிருளே, அவள் ஆன பெண்ணு?’ என்று கேட்டால் பையன் கைகொட்டிச் சிரிப்பான். ஆணென்றும் பெண்ணென்றும் தெரியாதபோது, அவள் என்று எப்படிச் சொல்வது? “அதோ வருகிறவன் ஆணு பெண்ணு?’ என்று கேட்டாலும் பைத்தியக்காரக் கேள்வியாகத்தான் முடியும். ஆணென்று முடிவு கட்டின பிறகு கேட்பதுபோல இருக்கிறது கேள்வி.

ஆகவே, ஆணென்றும் பெண்ணென்றும் தெரியாத சந்தேகத்தைச் சந்தேக பாஷையிலே பொதுவாகச் சொல்லவேண்டும். ஆணுக்கும் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/63&oldid=646050" இலிருந்து மீள்விக்கப்பட்டது