பக்கம்:வாழும் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - வாழும் தமிழ்

கிற்கிறவன் மனிதன, கம்பமா' என்று கேட்பதும் தவருக முடியும். -

இந்த கிலேயில் எப்படித்தான் நம் சங்தேகத்தைத் தெரிவிப்பது?

"அதோ தெரிகிறதே, அந்த உருவம் மனிதன. கம்பமா?’ என்று கேட்கும்படி வழி சொல்லிக் கொடுக்கிருர் இலக்கணக்காரர்.

இவ்வாறு வருகிற சங்தேகப் பேச்சுக்களைப்பற்றி இலக்கணம் ஆராய்கிறது.

'சங்தேகம் தெளிந்த பிறகு எப்படிப் பேச வேண்டும்? என்பது அடுத்தபடி வருகிறது. சந்தேகத்தோடு ஒருவன் கேள்வி கேட்கிருன். அதற்கு வேருெருவன் விடை சொல்கிருன். அல்லது சங்தேகப்பட்டவனே கொஞ்சம் கூர்ந்து கவனித். தமையால் தெளிவு பெறுகிருன். சங்தேகத்தினின்று. தெளிந்த கிலே வேறு. இயற்கையாகவே தெளிவாக இருக்கும் கிலே வேறு. சங்தேகம் என்பது இதுவோ அதுவோ என்று நிச்சயம் இல்லாமல் இருப்பது. தெளிவு என்பது அந்த இரண்டில் ஒன்று நிச்சய: மென்று தெரிந்துகொள்வது.

சந்தேகம் உண்டானபோது நினத்த இரண்டில் ஒன்றை மறுத்து மற்ருென்றைத் துணிவது தெளிவு. இப்படி மறுப்பதிலும் நிச்சயம் செய்வதிலும் பேச்சளவில் ஒரு சங்கடம் உண்டாகும்.

ஆணுே, பெண்ணுே என்ற சந்தேகம் தீர்ந்து: விட்டது. வருகிற பேர்வழி ஆண் என்று தெரிந்தது. 'வருகிறவன் ஆண்” என்று சொல்வதில் சங்கடம் ஒன்றும் இல்லே. ஆனல் பெண்ணுக இருக்கக்கூடும் என்று அதிகமாக நம்பியிருந்தவன், தான் நினைத்த பேர்வழி வரவில்லையென்று மறுத்துச் சொல்வதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/65&oldid=646055" இலிருந்து மீள்விக்கப்பட்டது