பக்கம்:வாழும் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வாழும் தமிழ்

மற்ற வார்த்தைகளைக் கொண்டு அந்தச் சொல்லுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.

'படி ஏறுவது கஷ்டம்” என்று சொன்னல் அவன் படிக்கட்டைக் குறிக்கிருன் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏறுவது என்ற காரியத்துக்கு இடமாக இருப்பது அதுதானே? 'படியால் அளந்து போடு” என்று சொல்லும்போது அதே மாதிரி, அளப்பது என்னும் தொழிலின் தொடர்பால், படியென்பது அளவு கருவி என்று தெளிகிருேம். இந்தத் தெளிவு, வினையில்ை வந்தது. ஒரு சொல்லே ஆலுைம் வெவ்வேறு வினேயினுல் வெவ்வேறு பண்டங்களைக் குறிக்கின்றது. -

"படியும் மரக்காலும் எடுத்து வா', 'படிக்கும் கைபிடிச்சுவருக்கும் நூறு ரூபாய் ஆகும்’ என்று பேசும்போது மரக்காலோடு சேர்த்துச் சொல்வதை அதைப்போன்ற அளவு கருவியென்றும், கைபிடிச் சுவரோடு சேர்த்துச் சொல்வதைப் படிக்கட்டு என்றும் தெரிந்துகொள்கிருேம். பொருளைச் சேர்த்துச் சொல்வதனால் இந்தத் தெளிவு உண்டாகிறது.

'கொடியும் செடியும் மரமும் வளர்ந்தன’, 'கொடியும் கம்பமும் அழகாக இருக்கின்றன்” என்று சொல்லும்போது முன்னே சொன்னது தாவர வர்க்கத்தைச் சேர்ந்ததென்பதும், பின்னே சொன்னது துவஜம் என்பதும் அருகிலே இனம் கேர்த்துச் சொல்லும் பொருள்களால் தெளிவாகின்றன. இது இன வேறுபாட்டால் வந்த தெளிவு.

தன்னை அலங்காரம் செய்துகொள்ளும் ஒரு பெண், 'கொடியைக் கொண்டுவா’ என்று சொன்னல் அவள் கையிலே கொண்டுபோய் மூவர்ணக் கொடியைக் கொடுக்கலாமா? அவள் நிற்கிற கிலேயும் கோலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/67&oldid=646059" இலிருந்து மீள்விக்கப்பட்டது