பக்கம்:வாழும் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மரியாதைப் பேச்சு

இப்போதெல்லாம் அரசியலைப்பற்றிய பேச்சே எங்கும் நிறைந்திருக்கிறது. ஜனநாயக தத்துவத்தை அலசி அலசி ஆராய்கிருேம். குடிமக்களுடைய கருத் தின்படியே ஆட்சி நடைபெற வேண்டும் என்ற கொள்கை உலகம் முழுவதும் வேர் ஊன்றி நிற்கிறது.

குடியரசு எப்படி நிகழ்கிறது? குடி மக்கள் அத்தனை பேரும் நேர்முகமாக அரசாங்க நிர்வாகத்தில் பங்கெடுத்துக்கொள்வதில்லே. அவர்களுடைய கருத் துக்கு இசைந்த பிரதிநிதிகள் நிர்வாகத்தை நடத்து கிருர்கள். சட்டசபையில் அங்கம் வகிக்கும் ஒவ் வொருவரும் பல மக்களுக்குப் பிரதிநிதிகளாக வந்து பேசுகிருர். அவர் பேசினல் அவருடைய பகுதியைச் சேர்ந்தவர் யாவரும் பேசுவதாகவே கருதவேண்டும். அவர் ஒருவரே பலருக்குச் சமானமான மதிப்பை அடைகிருர்.

பல பேருடைய வேலேயைக் கவனிக்கும் ஒருவ ஆணுக்கு எப்போதும் பெருமை அதிகந்தான். வட்ட மேஜை மகாகாடு லண்டனில் நடந்தபோது, காங்கிரஸ் மகாசபை தன் பிரதிநிதிகளே அனுப்பவேண்டுமென்று பிரிட்டிஷார் அழைத்தனர். பெரிய சபையாகிய அது பத்துப் பதினைந்து பிரதிநிதிகளேயாவது அனுப்பும் என்று ஆங்கில அரசாங்கம் நினைத்திருச்கும். ஆனல் காங்கிரஸ் மகா சபையோ காந்தியடிகளாகிய ஒரே ஒரு பிரதிநிதியை அனுப்பியது. சோமசுந்தரக் கடவுள் தம்முடைய கல்யாணத்துக்குக் குண்டோதரன் என்ற ஒரே ஒரு விருந்தாளியை அழைத்துக்கொண்டு வங்காராம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/70&oldid=646066" இலிருந்து மீள்விக்கப்பட்டது