பக்கம்:வாழும் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரியாதைப் பேச்சு 63%

குறிக்க வரவில்லே. தகப்பனரிடத்தில் நாம் வைக்கும் மரியாதையை அச் சொல் குறிக்கிறது. அவருட்ைய. உயர்வைக் காட்டுகிறது. இது வழக்கமாகப் பேச்சில் வந்த ஒரு சம்பிரதாயம். இப்போது இதை மரியாதைப் பன்மையென்று சொல்லுவார்கள். வழக்கியை உயற்சொற் கிளவி என்று தொல்காப்பியர் சொல்லு, கிருர். - -

ஆசிரியர் நாம் என்று எழுதுகிருர், காம் அழுத்தமாக இதைக் கண்டிக்கிருேம்’, ‘நேற்று. நமக்கு வரவேண்டிய கடிதம் வாராததல்ை செய்தி வெளியிட முடியவில்லை’ என்று பத்திரிகை ஆசிரியர் எழுதுகிருர். அவர் எழுதியதில் உள்ள 'ங்ாம்' என்பதை இலக்கணப்படி பார்த்தால் யாரோ நாகலந்துபேர் சேர்ந்த கூட்டத்தினர் சொல்வ. தாகவே கொள்ளவேண்டும். உண்மையில் அப்படி இல்லை. அறிவினலே அவர்கள் தம்மை உயர்த்திக் கொள்கிருர்கள். உலகமும் அதை அநுமதிக்கிறது. இந்தப் பன்மையை, 'ஆசிரியத் தன்மைப்பன்மை’ (Editorial We) என்று ஆங்கிலத்தில் சொல்கிருர்கள்.

இப்படியே அதிகாரம் வகிப்பவர்கள் தம்மைப் பன்மையில்ை சுட்டிக்கொள்கிருர்கள். அதனே ‘ராஜாங்கத் தன்மைப் பன்மை (Royal We) என்று கூறுவர். ‘மந்திரி, நம்முடைய குடிகள் சுபிட்சமாக இருக்கிருர்களா?' என்று நாடகத்திலே கேட்கும் அரசன், மந்திரியையும் சேர்த்துக்கொண்டு நாம்' என்று பேசவில்லை. காடும் குடிமக்களும் அதிகாரமும் வேறு யாருக்கும் இல்லாமல் தனக்கே உரியவை என்ற அகங்காரத்திலேதான் அவன் பேசுகிருன்.

ராஜா முதல் கிராம முன் சீப் வரையில் அதிகாரத். தால் பன்மையை உபயோகிக்கிருர்கள். இப்படியே அருள்ாட்சி நடத்தும் ஆசிரியர்கள், 'நாம் உள்ளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/72&oldid=646071" இலிருந்து மீள்விக்கப்பட்டது