பக்கம்:வாழும் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c64 வாழும் தமிழ்

உவக்கிருேம்” என்பது போலப் பன்மையிலே விவகாரம் கடத்துகிருர்கள்.

பன்மையில்ை மதிப்பு ஏறுகிறது. ஒரு பொருளேக் குறிக்கும்போது சொல்லில் பன்மை ஏற ஏற அப்பொருளின் மதிப்பும் அதிகமாகிறது. கறுப்பண்ண நாயக்கன் சாமானிய மனிதன். அவன், இவன் என்று ஊரார் அவனேப் பேசுகிருர்கள். அவனுக்குப் பணம் வருகிறது. “கறுப்பண்ண நாயக்கன் ஒரு ரூபா கூலி கேட்கிருன்” என்று சொன்ன ஆசாமியே இப்போது, “கறுப்பண்ண காயக்கர் கடையில் வெல்லம் வாங்கி வா’ என்று சொல்லுகிருன், “கறுப்பண்ண நாயக்கர் வருகிருர், போகிருர்’ என்று பேச்சிலே ‘ன்’ போய் ர் வருகிறது. நாயக்கர் இப்போது சில்லறைக் கடை வியாபாரத்தை விட்டுவிட்டுப் பெரிய கிடங்குகள் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்கிரு.ர். அவரது மதிப்பு ஏறிவிட்டது. பொருளுக்கு மதிப்பு ஏறினல் .ெ சா ல் லு க் கு ம் ஏறவேண்டாமா? இப்போது, 'கறுப்பண்ண நாயக்கர்’ என்ற பன்மை போதாது. 'கறுப்பண்ண நாயக்கர் அவர்கள் வருகிருர்கள்’ என்று புதிய பன்மைச் சொற்கள் அவர் மதிப்பைக் கூட்டித் தெரிவிக்க வருகின்றன. ஒரு ர் போதா தென்று, அவர் வேறு, கள் வேறு, இத்தனையும் சேர்ந்து அவருடைய மதிப்பைச் சொல்கின்றன. இத்தனை பன்மையும் வந்தாலும் கறுப்பண்ண நாயக்கர் என்னவோ ஒரு மனிதராகவே இருக்கிரு.ர். காலந்து பேராக ஆகிவிடவில்லை.

இலக்கணப்படி இது தப்பல்லவா? ஒன்றைப் பலவாகச் சொல்வது பொய் அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் தப்புப்போலத்தான் தோன்றுகிறது. ஆல்ை இப்படி வழங்குவதற்குத் தக்க காரணம் இல்லாமல் போகவில்லை. வாழ்க்கையில் மனிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/73&oldid=646073" இலிருந்து மீள்விக்கப்பட்டது