பக்கம்:வாழும் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - வாழும் தமிழ்

செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் சொல்வது தவியுதவத்திலே, இருக்கும் நூலுக்கு மாத்திரம் பொருங்துவது என்று கொள்ளக்கூட்ாது; புலவர்கள் இயற்றும் நூல்கள் யாவுமே செய்யுளும் செய்யுளின் இனமுமே ஆகும். செய்யுளாக அமைந்து காவியமும் வசனமாக அமைந்த காவலும் பல விஷயங் களில் ஒத்த இலக்கணம் உடையவை. அவ்வாறே செய்யுள் வழக்கு என்று வருவனவற்றைப் பொது வாக நூல் வழக்கு என்றே கொள்ளவேண்டும்.

இயல்பான பெயரை முதலிலே சொல்லிய பிறகே சுட்டுப் பெயரைச் சொல்வார்கள் என்ற இலக்கணம் உலக வழக்காகிய பேச்சுக்கு உரிய இலக்கணம். அங்கே பேசுகிறவன் கேட்பவனுக்குத் தெளிவாகப் படும்படி பேசவேண்டுவது முக்கியம். ஆனல் நூல் விஷயத்தில் அங்கத் தெளிவோடு இலக்கியச் சுவையும் அமையவேண்டும். சுருக்கமாகச் சொல்லுகிற ஒன்றை வளர்த்தி வளர்த்தி எழுதுவ தற்குக் காரணம் இலக்கியச் சுவை உண்டாக வேண்டும் என்பதுதான். “காசிக்குப் போனன்; காவடி கொண்டுவந்தான்’ என்பது பேச்சு வழக்கில் காரியவாதியின் பேச்சாக இருக்கலாம். ஆனல் நூல் வழக்கில் இலக்கியச் சுவை உண்டாக வேண்டுமானல், அந்த இரண்டெழுத்துச் சொல்லாக நிற்கும் காசி இரண்டாயிரம் பாடல்களாலே சொல் லப் பட வேண்டும். காசிக்குப் போனவனே, போன முறையை, காவடியை, அதைக் கொண்டுவந்த பெருமையை எல்லாம் கதையாக்கி, வருணனையாக்கி, ரசமயமான காவியம் செய்துவிடுவான், இலக்கிய கர்த்தாவாகிய கவிஞன்.

கொல்காப்பியர் உலக வழக்கில் சுட்டுப் பெயர் எப்படி வருமென்பதைச் சொல்லி யிருக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/81&oldid=646090" இலிருந்து மீள்விக்கப்பட்டது