பக்கம்:வாழும் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுட்டும் இலக்கியச் சுவையும் 71

முன்பு சொல்லாமல் அவன் முதலிய சுட்டுப் பெயர்களேச் சொல்வது வழக்கம் அல்ல. ஒருவரும் வராதபோது, 'அவன் வருகிறதைப் பார்” என்று சொல்லி ஏமாற்றுவதைப் போன்றதுதான் அதுவும். ஆகவே, சுட்டுப்பெயர் வரும்போது அதற்கு முன் இயல்பான பெயர் வந்திருக்க வேண்டும்.

- “அவள் ஆற்றங்கரையில் நின்றுகொண் டிருந்தாள். ஆற்றின் சலசலத்த நீரோட்டத்தி னிடையே மீன்கள் மிளிர்ந்தன. சிறிய அலைகள் கரையில் வந்து மோதின. அவள் உள்ளத்திலும் அலேகள், சிறிய சிறிய எண்ண அலைகள், வந்து மோதின. அவனப்பற்றிய எண்ண ஆலைகள் அவை. -

இப்படி ஒரு கதை ஆரம்பமாகிறது. இந்த

மாதிரி எத்தனையோ சிறு கதைகளும் நாவல்களும் ஆரம்பிப்பதைப் பார்த்திருக்கிருேம். இங்கே அவள், அவன் என்ற சுட்டுப் பெயர்கள் அங்கரத்தில் நிற்கின்றன. ஆசிரியர் எந்தப் பெண்ணையும் எந்த ஆணையும்பற்றி நமக்குச் சொல்லவில்லை. ஆனல் முன்பே சொல்லிவிட்டவரைப்போல் திடீரென்று அவள் என்றும் அவன் என்றும் ஆரம்பிக்கிருர், இது ஏமாற்றம் அல்லவா? -

இந்த மாதிரி விஷயங்களேத் தொல்காப்பியம் சிக்கறுத்துச் சொல்கிறது. உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரண்டு வகையாலும் தமிழ் மொழி எப்படி கடக்கிறதென்பதைத் தொல்காப்பியர் சொல் கிருர். பெரும்பாலும் இரண்டு வகையும் ஒத்து நடக் கின்றன. சில சில் வழிகள் பேச்சு மொழியில் சிறப் பாக அமைந்திருக்கின்றன. சில முறைகளைச் செய்யுளிலேதான் காணலாம். இந்த விசேஷ இலக் கணங்களையும் தொல்காப்பியர் சொல்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/80&oldid=646089" இலிருந்து மீள்விக்கப்பட்டது