பக்கம்:வாழும் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨0 - . வாழும் தமிழ்

சொல்லும்போது இராசராச மாமன்னர் என்று நீளமாக வரும் பெயரை அவர் என்ற சுட்டுச் சொல் குறித்து கிற்கிறது. முன்னலே சொன்ன இராசராச மர் மன்னர் என்பதுதான் அங்கே வரும் அவர் என்ற சுட்டுக்குப் பொருள்.

ஆகவே அவர் என்ற சுட்டானது முன்னலே சொன்ன ஒருவரைச் சுட்டுகின்றது. மீட்டும் மீட்டும் அவ்வளவு பெரிய பேரைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் செய்துவிடுகிறது. அதோடு அந்த இராசராச மாமன்னர் வேறு, இவர் வேறு என்ற சந்தேகத்தை உண்டாக்காமல் இத்தனே காரியங்களையும் செய்தவர் ஒருவரே என்ற உண்மை யையும் புலப்படுத்துகிறது. .

ராமன் என்ற பெயரோடு நான்கு பேர் இருக்கிருர்கள். நான்கு பேரையும் பற்றிப் பேசு கிருேம். ராமன் என்ருலே மகத்தான காரியங்களைச் சாதித்த வீரம் நினைவுக்கு வருகிறது. "ராமன் ராவண சங்காரம் செய்தான்', 'ராமன் இருபத் கொரு கடித்திரிய பரம்பரையைக் கருவறுத்தான்”, 'ராமன் கிருஷ்ணனுக்குத் தமையனன்ை', 'இன்று ராமன் ஒளிக்கதிர் ஒன்றைக் கண்டு மக்களுக்கு வழங்கியிருக்கிருன்’ என்ற பேச்சிலே வரும் நான்கு ராமர்களும் வெவ்வேறு பேர்வழிகள். அங்கே அவன் என்ற சுட்டுப் பெயர் பயன்படாது. - -

ஒருவர் செய்த செயல்களேயே சொல்லி வரும் போது முதலில் அவர் பெயரைச் சொன்னல் போதும். பிறகு சுட்டுப் பெயரைச் சொல்லலாம். இதுதான் பேச்சு வழக்கு. . z _ திடீரென்று, அவனுக்கு நாலு பிள்ளைகளாமே!” என்று பேசினால், எவன்?’ என்ற கேள்வியைத்தான் எதிர் நிற்பவர் கேட்பார். இன்னுரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/79&oldid=646087" இலிருந்து மீள்விக்கப்பட்டது