பக்கம்:வாழும் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுட்டும் இலக்கியச் சுவையும் 69'."

நண்பர் நிமிர்ந்து பார்ப்பார்; சுற்றுமுற்றும் பார்ப்பார் யாரையும் காணுமல் திகைப்பார். சுட்டப் படுகின்ற பொருள் இல்லாமல் சுட்டி ஏமாற்றிய குற்றத்துக்கு நாம் ஆளாவோம்.

அவன், அவள், அது என்ற வார்த்தைகள் முதல் முதலில் மொழி ஏற்பட்ட காலத்தில், எதிரே கண்ணினலே கண்ட பொருள்களைச் சுட்டும். பொருட்டு உண்டாயின. நாளடைவில் மொழி யானது கருத்தினற் சிந்திப்பதையும் குறிக்கும் அளவுக்கு வந்தபோது, அந்தச் சுட்டுப் பெயர்கள் கருத்தினுல் உணர்ந்த பொருள்களேயும் சுட்ட வந்தன. கேரே பொருள் இல்லாவிட்டாலும் பொருளேப் பற்றிய விவகாரம் வந்தபோதெல்லாம் சுட்டுப் பெயர்கள் உபயோகப்பட்டன. -

அந்த கிலேயில், இலக்கணக்காரர்கள் வாழ்க்கை யிலும் இலக்கியத்திலும் இந்தச் சுட்டும் வார்த்தைகள் எப்படி யெல்லாம் உபயோகிக்கப் படுகின்றன என்பதை ஆராய்ந்தார்கள்.

முதலில் ஒருவர் பெயரைச் சொல்லிவிட்டு, அவர் செய்த காரியங்களைச் சொல்லுகிருேம். ஒவ்வொரு தடவையும் அவர் முழுப் பெயரையும் சொல்வது அநாவசியம். ராமன் தசரதருடைய குமாரன். ராமன் கோசலேயினுடைய பிள்ளே. ராமன் விசுவா மித்திரருக்கு உதவி செய்தான். ராமனுக்கு மூன்று. பேர் தம்பிமார்' என்று சொல்லி வந்தால் கமக்கு அலுப்புக் கட்டுகிறது. முதலில் மாத்திரம் ராமனே வைத்துக்கொண்டு மற்ற இடங்களிலுள்ள ராமனே 'அவன் ஆக்கிவிட்டால் அந்த அலுப்புத் தோன்றுவ, தில்லை. அதோடு வார்த்தையும் சுருங்குகிறது. 'இராசராசர் தஞ்சையில் இருந்து அரசாண்டார். அவர் ஒரு பெரிய கோயிலேக் கட்டினர்” என்று;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/78&oldid=646084" இலிருந்து மீள்விக்கப்பட்டது