பக்கம்:வாழும் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வாழும் தமிழ்

வகுக்கும் இடத்தில், சிறப்புப்பெயர், இயற்பெயர் என்ற இரண்டின் இடத்தையும் ஆராய்கிருர் கொல் காப்பியர். -

நல்லுதடன் என்று ஒருவன் இருந்தான். அவன் ஒரு படைக்குத் தலைவனைன் அரசனுடைய நன்மதிப்பைப் பெற்ருன் ஏகுதி என்ற பட்டம் அவனுக்குக் கிடைத்தது. அந்தப் பட்டப் பெயரை அவன் இயல்பான பெயருக்கு முன்னே சொல்வதா? பின்னே சொல்வதா? இது என்ன பிரமாதம்? முன்னே தான் சொல்ல வேண்டும். ராவ்சாஹிப், ராவ்பகதூர், ஸ்ர் பட்டமெல்லாம் முன்னலேதானே வைத்துச் சொல்கிருேம்?' என்று நண்பர்கள் உடனே சொல்ல லாம். பழக்கப்பட்டுப் போனதால் நமக்கு இது சுலப மாகத் தோன்றுகிறது.

- முதலியார் சபாநாதன், சபாகாத முதலியார்இந்த இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? முதலியார் என்பதை முன்னும் பின்னும் சேர்ப்பதில் வித்தியாசம் இருக்கிறது. இலங்கைக்காரர்களுக்கு இதன் வித்தியாசம் தெரியும். சபாநாத முதலியார் என்பது தமிழ் நாட்டில் இயற்பெயர். முதலியார் என்பது அங்கே ஒரு குடிப்பெயர். அது இயற் பெயரோடு ஒட்டிக்கொண்டு சபாநாத முதலியார் என்று வழங்குகிறது, இலங்கையிலே முதலியார் என்பது அரசாங்கத்தார் வழங்கும் பட்டம். அதை முதலிலே சேர்த்துச் சொல்லவேண்டும். அப்படித் தான் அங்கே சொல்கிருர்கள்.

ஆகவே, சபாநாத முதலியாரே, முதலியார் சபா காதன் என்று சொல்ல முடியாது. முதலியார் என்பதை முதலில் வைத்துச் சொல்லும்போது அது பட்டப் பெயர் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/89&oldid=646108" இலிருந்து மீள்விக்கப்பட்டது