பக்கம்:வாழும் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பெரும்பான்மையும் சிறுபான்மையும்

ஜனநாயக யுகத்தில் பெரும்பான்மையான வாக்குக்கு மதிப்பு அதிகம். மெஜாரிடி, மைனரிடி’ என்ற சொற்கள் இப்போதுதான் அதிகமாக அடிபடு கின்றன. பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் என்று தமிழிலே சொல்கிருேம். பழைய காலத்தில் இப்படி வகுக்கும் பிரிவு இருந்தது. ஆனால் பெரும் பான்மையோர், சிறுபான்மையோர் என்று சொல்வ தில்லை. மெஜாரிடி என்பதற்குப் பன்மை என்றும் மைனர்டி என்பதற்குச் சின்மை என்றும் பழைய வார்த்தைகள் உண்டு. பலவாக இருக்கும் தன்மை, சிலவாக இருக்கும் தன்மை என்று அங்தச் சொற் களுக்கு அ ர் க் த ம். பெரும்பான்மையோரைப் பல்லோர் என்றும், சிறுபான்மையோரைச் சில்லோர் என்றும் கூறலாம். -

ஒரு பெரிய கூட்டத்தில் பலவகை மக்களும் கூடி யிருக்க. அவருள்ளே சிறப்பு அடைபவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். பல்லோராக இருப்பதனுல் சில சமயம் ஒரு சாராருக்கு மதிப்புப் பெருகும். சில்லோ ராக இருந்தாலும் தகுதிபற்றி மதிப்படைபவரும் இருக்கிருர்கள். பல்லோர் பெறும் சிறப்பு, பன்மை யினால் வரும் சிறப்பு. சில்லோர் மதிப்படைதல் தகுதி முதலிய தலைமையால் வரும் காரியம்.

ஆகவே, சிறப்பைப் பெறுவதற்குப் பன்மை,

தலைமை என்னும் இரண்டும் காரணமாக கிற்கும். ஜனநாயகம் என்பது பன்மைக்குப் பெருமை கருவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/99&oldid=646131" இலிருந்து மீள்விக்கப்பட்டது