பக்கம்:வாழும் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை வகையான பொருள்கள் 89.

வெவ்வேறு வகையான உபயோகங்களையுடைய சில பொருள்களைச் சேர்த்துச் சொல்கிருேம். அப்போது எந்தச் சோல்லே உபயோகிப்பது? எல்லா வற்றுக்கும் பொதுவான சொல்லேயே சொல்ல வேண்டும், கறியும் பாயசமும் தின்ருரென்று சொல்லக்கூடாது; கறியும் பாயசமும் உண்டார் என்பதுதான் பொருத்தம்.

"யாழும் குழலும் ஊதினர் என்று சொன்னல் யாழ் கோபித்துக்கொள்ளும். அங்கே யாழும் குழலும் இயம்பினுர் அல்லது வாசித்தார் என்று சொல்லலாம்.

எண்ணுங் காலும் அது அதன் மரபே

என்று தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிரு.ர். அவராக விதிப்பது அன்று; அது மரபு, பழைய காலம் முதல் வரும் வழக்கம் என்று சொல்கிரு.ர். ‘'வேறு வேறு வினேச் சொல்லால் சொல்வதற்குரிய பொருள்களேச் .ே ச ர் த் து ச் சொல்லும்போதும் அவற்றுள் ஏதாவது ஒன்றுக்கே உரிய வினையைச் சொல்லாமல் முன்னே சொன்னது போலப் பொது வான வினைச் சொல்லால் சொல்வதுதான் சம்பிர தாயம்’ என்பது குத்திரப் பொருள்.

'பல்வகைப்படுதல் வாழ்க்கையிற் சுவைதரும்’ என்று ஒர் ஆங்கிலப் பழமொழி உண்டு. தமிழர் தம் வாழ்க்கையில் பலவகைச் சுவையும் உடையார் என்பதை இந்தப் பொதுவும் வேறுபாடுமாகிய சொற்களின் வரையறையே காட்டும். w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/98&oldid=646129" இலிருந்து மீள்விக்கப்பட்டது