பக்கம்:வாழும் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாழும் தமிழ்

மன்று. படைக்கலத்தை எய்தான் என்பதும் தவறு. எய்வது அம்புக்கு மாத்திரம் உரிய தொழில். படைக் கலம் என்று பொதுவான பெயரை உபயோகிக்கும் போது அதற்கு ஏற்ற வினைச் சொல்லே, சேர்த்துச் சொல்லவேண்டும். படைக்கலம் வழங்கிளுன் என்று. சொல்லவேண்டும்; படை தொட்டான் என்றும் சொல்லலாம்.

இவ்வாறே வாத்திய வகைகள் பல இசைக் கருவிகள் அனைத்துக்கும் பொதுவாக இயம் என்னும் பெயர் வழங்கும். அவற்றை வாசிக்கும் முறைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. முரசையும் தண்ணு மையையும் கொட்டுவார்கள்; குழலேயும் கொம்பையும் ஊதுவார்கள் யாழையும் வீணையையும் எழுப்பு வார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவாக, 'இயம் இயம்பினர், வாசித்தார்’ என்று சொல்லலாம்.

தமிழர் வாழ்க்கையில் நுகர் பொருள்களும், கருவிகளும் பலவகைப்பட்டன. அவற்றைப் பயன் படுத்தும் தொழில் முறையும் வேறு வேருக இருந்தன. ஆகவே, பொதுவாகச் சொல்லும்போது பெயரும் தொழிலும் பொதுவாக இருக்கவேண்டும். தனித் தனியே சொல்லும்போது தனித் தனியே இருக்கவேண்டும். அப்படியே பேசி வந்தார்கள். அது பிறகு இலக்கணமாயிற்று, தொல்காப்பியர் அங்த இலக்கணத்தைச் சொல்கிரு.ர்.

வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.

வெவ்வேறு தொழிலுக்குரிய வினைகளால் குறிக்கப்படும் வெவ்வேறு பொருள்களுக்கும் பொதுவான ஒரு சொல்லோடு, ஒரே வகைப் பொருளுக்குரிய வினைச் சொல்லச் சேர்த்துப் பேச

மாட்டார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/97&oldid=646127" இலிருந்து மீள்விக்கப்பட்டது