பக்கம்:வாழும் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை வகையான பொருள்கள் 87

என்னலாம்; அப்படியே கறியை உண்டான் என்று சொல்லலாம்; சோற்றை உண்டான் எ ன் று சொல்லலாம்.

ஆபரணங்களின் திறத்திலும் எல்லா வகை ஆபரணங்களுக்கும் பொதுவான பெயர்கள் இருக் கின்றன. அணி, அணிகலம், நகை முதலிய பெயர்கள் அத்தகையவை. முடி, வளே, பாதசாம், மேகலே, ஆரம் என்ற பலவகையான பொருள்களையும் இந்தப் பொதுப் பெயர்களால் குறிக்கலாம். அவற்றை உபயோகப்படுத்தும் முறைகளேக் குறிக்கும் வினைச் சொற்களிலும் ஒன்றுக்கே உரியவையும், பலவற் றுக்குப் பொதுவானவையுமாக வார்த்தைகள் இருக் கின்றன. கவித்தல் என்ற தொழில் கிரீடத்துக்கு மாத்திரம் உரியது. கட்டுதல் என்பது சதங்கை முதலியவற்றுக்கு உரியது. இப்படியே செறித்தல் பூட்டுதல் என்று வேறு வேறு வகைக்கு உரியவை உண்டு. ஒர் ஆபரணத்துக்கு உரியதல்லாத வினைச் சொல்லே அதளுேடு சேர்த்துச் சொல்லக்கூடாது. 'வளையைக் கவித்தான்” எ ன் ரு ல், 'யாரோ பைத்தியம் கையிலே செறிக்க வேண்டிய வளையைக் தலையிலே வைத்துக்கொண்டது போலும்' என்று தான் கினைக்கத் தோன்றும். எல்லா வகை ஆபரணங் களுக்கும் பொதுவான பெயரைச் சொல்லும்போது பொதுவான வினேச் சொல்லையே சொல்ல வேண்டும். அணி கவித்தான் என்ருல் அது தவறு: அணி அணிக் தான் என்று பொது வகையால் சொல்ல வேண்டும்.

ஆயுத வகைகள் பல. அவற்றின் பிரயோகங் களும் பல. படைக்கலம் என்ற பெயர் எல்லா ஆயுதங் களுக்கும் பொது. அவற்றில் அம்பு எய்வதற்குரியது; வேல் எறிவதற்குரியது; வாள் வெட்டுவதற்குரியது: ஈட்டி குத்துவதற்குரியது. ஈட்டியை எய்தான். வாளால் குத்தினன் என்று சொல்வது பொருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/96&oldid=646124" இலிருந்து மீள்விக்கப்பட்டது