பக்கம்:வாழும் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韶6, வாழும் தமிழ்

சொற்கள் வெவ்வேறு வகையான அணிகளுக்குரியன ஒவ்வோர் அணியை அணியும் முறைக்கும் பழ்ங்கால முதலே தனித்தனி வார்த்தை உண்டு.

ஒவ்வொரு வகை உணவை உண்ணும் முறைக் கும் வேறு வேறு சொல் இருக்கிறது போன்றதுதான் இதுவும். ஒரு வகையைப்பற்றிச் சொல்லும்போது அதற்குரிய சொல்லாலே சொல்லவேண்டும். தனித் தனிச் சொல்லாலே தமிழர் சொல்லிவந்தார்கள். முடியைச் செறித்தான், தேனேத் தின் ருன் என்று சொல்லக்கூடாது. 'இட்டிலியைக் குடித்துவிட்டுக் காயியைத் தின்றுவருகிறேன்” என்று காம் பேசிளுல் பக்கத்திலுள்ளவர்கள் சி ரி ப் பார் க ள். தமிழர் வாழ்க்கையில் வெவ்வேறு பண்டங்களும், அவற். அக்குக் தனித்தனியே பெயர்களும், அவை உபயோகப் படும்போது நிகழும் தொழிலுக்குத் தனித்தனிப் பெயர்களும் இருந்தன. அவர்களுடைய பொருள். வளப்பத்தையும் இங்தப் பெயர்களும் வினேகளும் தெரிவிக்கின்றன. ... " . . . . . . உண்ணும் பொருள்களில் ஒன்றற்கே உரிய சொல்லே மற்ருென்றுக்கு உரிய வார்த்தையால் சொல் லக்கூடாது. உண்ணும் பொருள்கள் அனைத்துக்கும் பொதுவாகச் சில சொற்கள் உண்டு. உணவு, அடிசில் முதலியன பொதுவாகச் சாப்பாடு என்ற பொருளைத் தருவன. உணவு தின்ருன் என்று காய்கறி குழம்பு ரசத்தோடு சாப்பிடுவதைக் குறிக்கலாமா? கூடாது; அந்த உணவில் தின்பதற்குரிய பண்டம் மட்டுமா இருக்கிறது? பருகுவதற்கும், கக்குவதற்குங்கூடப் பல வகை இருக்கின்றன. ஆகவே, உணவு என்று. எல்லாவற்றுக்கும் பொதுவான சொல்லைச் சொல்லும் போது அதற்கு ஏற்றபடி உண்டான், அயின் முன் பொதுச் சொல்லால் சொல்லவேண்டும். பயும் உணவு என்னலாம்; சோற்றையும் உணவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/95&oldid=646122" இலிருந்து மீள்விக்கப்பட்டது