பக்கம்:வாழும் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை வகையான பொருள்கள் 85.

வகையான முறைகள் இருக்கின்றன. ஏழைக்குக் குடிப்பது என்ற ஒரே முறைதான். காரணம், அவ னுடைய உணவைக் கடிக்க முடியாது; சோற்றைப் போல விழுங்க முடியாது.

'அவன் சோறு குடித்துவிட்டு வந்திருக்கிருன்’ என்று சொன்ன மாத்திரத்தில், அவன் சாப்பிட்ட சோறு எத்தகையது என்று தெரிந்துவிடுகிறது. சோறு என்று சொன்னலும், அது கஞ்சியோ கூழோ என்று தெரிவிக்க ஒரு வார்த்தை அந்தப் பேச்சில் இருக்கிறது. குடித்து என்ற சொல் அவனுடைய உணவு, குடிக்கும் உருவத்தில் அமைந்ததைப் புலப் படுத்துகிறது. அதன்மூலம் அந்த ஏழையின் வாழ்க்கை கிலேயும் தெரியவருகிறது.

இத்தகைய வேறுபாட்டைத் தெரிவிக்கும் சொற்கள் தமிழில் இருக்கின்றன. குடிக்கிற பொருள் வேறு தின்னுகின்ற பண்டம் வேறு. மோரைக் குடிக்கலாம்; தின்ன முடியாது. இட்டிவியைப் பருகினேன் என்று சொல்லக்கூடாது. உணவிலே, உண்பது, தின்பது, பருகுவது, கக்குவது, உறிஞ்சுவது என்று வகைகள் உண்டு. அவற்றுக்கு ஏற்ற வார்க் தைகள் தனித்தனியே இருக்கின்றன; பல காலமாக இருந்துவருகின்றன. காரணம், பல காலமாகப் பல வகையான பண்டங்கள் தமிழர் வாழ்க்கையில் வழங்கி வருவதுதான்.

ஆபரண வகைகளைப் பார்க்கலாம். அவற்றிலும் ஒவ்வொன்றை ஒவ்வொரு விதமாக அணிகிருேம். முடியைக் கவித்துக்கொள்கிருேம். முடி கவித்தான் என்று கூறுவது வழக்கம். இடையிலே மேகலையைக் கட்டிக் கொள்வார்கள். கையிலே வளையைச் செறிப் பார்கள். மார்பிலே பதக்கத்தைப் பூண்பார்கள். கவித்தல், கட்டுதல், செறித்தல், பூணுதல் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/94&oldid=646120" இலிருந்து மீள்விக்கப்பட்டது