பக்கம்:வாழும் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வகை வகையான பொருள்கள்

ஏழைக் குடியானவன், கூலி வேலை செய்து பிழைக்கிருன் நடுப்பகலில் அவனுக்கு உணவாக அவன் மனைவி கூழைக் கலயத்தில் கொணர்ந்து கொடுக்கிருள். இரண்டு கையாலும் அதை வாங்கி அவன் குடிக்கிருன். அவனுக்கு அந்த வேளை உணவு அதனுடன் முடிந்தது. அவனிடம் போய், சாப்பிட் டாயிற்ரு?" என்று யாரும் கேட்பதில்லை. 'சோறு குடித்தாயிற்ரு' என்று கேட்கிருர்கள். இன்னும் .சில் பேரிடம், 'சோறு சாப்பிட்டாயிற்ரு?’ என்று கேட்கிருர்கள். இரண்டு கேள்வியிலும் காட்டு நிலை சித்திரமாக நிற்கிறது. ஏழைத் தொழிலாளியின் உணவு, குடிக்கும் அளவிலேதான் இருக்கிறது. இலை போட்டுப் பிசைந்து கவளமாகச் சாப்பிடும்படி அவனுடைய கிலே இல்லே. ஆனல் சோறு சாப்பிடுகிற வர்கள், இலே போட்டுக் காயென்றும் கறியென்றும் குழம்பென்றும் ரசமென்றும் வெவ்வேறு வகை உணவுகளே உண்ணுகிருர்கள். &

வளப்பம் மிகுந்த வாழ்வில் உணவு பலவகைப் படும். சோறு, கறி, ரசம், பாயசம், மோர் என்ற பொருள்களைப் போலப் பலவகைச் சுவையும் உருவ மும் உடைய பண்டங்கள் உணவாக உதவுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதிரியாக உண்ணு கிருேம். சோற்றைக் கையால் எடுத்து வாயில் இட்டு விழுங்குகிருேம், கறியைக் கடித்து மென்று தின்கி ருேம். பாய்சத்தைக் கையால் எடுத்து நக்குகிருேம். சில சமயங்களில் தொன்னேயில் விட்டுக் குடிக்கிருேம். ஆகவே சாப்பிடும்போது, உட்கொள்வதில் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/93&oldid=646118" இலிருந்து மீள்விக்கப்பட்டது