பக்கம்:வாழும் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப் பெயர்கள் 83.

உணர்ச்சி இல்லாததுதான். முடியுடைவேங் தரில் ஒருவனுகிய கரிகாலனுக்குக் கால் கரிந்ததனால் அந்தப் பெயர் வந்தது. அந்தப் பெயர் கவிதையில் அமைந்து புகழ்பெறுகிறது. முடத்திருமாறன் என்பவன் ஒரு பெரிய பாண்டிய அரசன். அவன் முடவன் என்பதை அவன் பெயரே காட்டுகிறது.

புலவர்களுள்ளே கெட்டிமையார் என்பவர் நீண்ட இமையை உடையவர். ஏணிச்சேரி முட மோசியார், ஐயூர் முடவனர் என்னும் இருவரும் முடவர். நெடுங்கழுத்துப் பரணர் ஒட்டகம் போல நீண்ட கழுத்துடையவர். புகழ் பெற்ற புலவர்களே இப்படிக் குறிப்பதில் சிறிதளவாவது இழிவுணர்ச்சி இருக்க முடியுமா? . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/92&oldid=646115" இலிருந்து மீள்விக்கப்பட்டது