புலவர் சுந்தர சண்முகனார்
103
ஏற்பட்ட போது மட்டும் பிற மொழியில் பேசுதல், திருக்கோயில் வழிபாடு, திருமண நிகழ்ச்சி முதலியன தமிழ் மொழியிலேயே செய்யப் பெறுதல், தமிழ்க் கல்விக்கும் தமிழ்ப் புலவர்கட்கும் நிறைந்த களைகணும் பெருமையும் அளித்தல் முதலியனவாம். இவற்றுள் திருக்கோயில் வழிபாடு தவிர மற்றையன பல விடங்களில் நடைபெறுகின்றன. தமிழிலே திருக்கோயில் வழிபாடு செய்தலாகிய ஒன்று மட்டுந்தான் இன்னும் கோயில்களில் நடக்கவில்லை. ஆதலின் அஃதொன்றையே இக்கட்டுரையின் இன்றியமையாக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்குகின்றேன்.
நம் தமிழ்மக்கள் நாயன்மார், ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோயில்களையே பெரும்பாலும் சிறப்புடையனவாகக் கருதுகின்றனர். அங்ஙனமே தேவாரப் பாடல் பெற்ற ஒரு கோயிலுக்குச் சென்று பார்ப்போமானால் ஆங்கு முதலில் வடமொழியிலேயே மலர் தூவு வழிபாடு (அர்ச்சனை) நடக்கும். அது பொதுமக்களுடைய காதுக்கும் இனிமை தராது; ஒரு சிறிதும் பொருள் விளங்காததால் அறிவிற்கும் இனிமை தராது. அது முடிந்ததும் இடி இடித்து மழை பெய்து நின்றதுபோல் இருக்கும். பின்பு தமிழ்மறை ஓதப்படும். திறனுடையவர்களால் ஓதப்படுமாயின், அது கார் காலத்தில் மழை நின்றதும் கோவலர் இனிய தீங்குழல் எடுத்து ஊதுதல் போல் காதுக்கு இனிமை பயக்கும். அன்பும் ததும்பும். இக்கருத்தைக் கொண்டு தான், நம் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார் நால்வர் நான்மணி மாலையில்