பக்கம்:வாழும் வழி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

133


வகை உயிர்வாழ்க்கைக்கும் தேவையான வெப்பமும் வெளிச்சமும் அவனது அருட்கொடையே.

உடல் நன்றாக இருப்பதற்கு, போதுமான கதிரொளி மேலே பட வேண்டும் (Sun Bath). நிழல் பக்கமுள்ள சில மரஞ்செடிகள் சாய்ந்து வளைந்திருப்பதற்குக் காரணம், அவை கதிரொளி வீசும் திக்கு நோக்கிச் சென்றமையேயாகும் - அவ்வொளியின் உதவியால்தான் செடிகள் தம் வளர்ச்சிக்கு வேண்டிய மாவுப் பொருளைத் தயார்செய்து கொள்கின்றன. மக்களாகிய நம் கண்களின் நலத்திற்கும் ஞாயிற்றின் ஒளிபடல் நல்லது. பல்லுக்கும் அவ்வாறே என்று கூறுகின்றனர். இது குறித்தே ஞாயிறு வணக்கம் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. உலகில் மக்கள் ஞாயிற்றின் தோற்றத்தை மகிழ்ந்து வரவேற்கின்றனர் - கடவுளாக மதித்து வழிபடுகின்றனர். இதற்குக் காரணம் அவனால் கிடைக்கும் நன்மையேயன்றோ? இளங்கோவடிகள் கூட,

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”

என்று சிலப்பதிகாரத்தில் பாடியுள்ளாரே. நக்கீரரோ,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு,
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு”

என்று முருகாற்றுப்படையில் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இதுகாறுங் கூறியவற்றால், கதிரொளியின் ஆற்றலும் பயனும் நன்கு புலனாகுமே! எனவே, கதிரொளி படுவதனால் நிலத்து மண்ணில் உப்பு ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/135&oldid=1112379" இலிருந்து மீள்விக்கப்பட்டது