பக்கம்:வாழும் வழி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

19


சுற்றத்தினர் வந்து சூழ்ந்துவிட்டனர். சுற்றத்தார் என்றால் ஒருவரல்லார்; இருவரல்லார்; கடல் நீரும் போதா அளவில் பலர் கூடிவிட்டனர். அஞ்ஞான்று, பெண் தன் முழுத் திறமையையும் பயன்படுத்த வேண்டும். இது பற்றியன்றோ,

“குடநீர்அட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
கடல்நீர் அறஉண்ணும் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்”

என நாலடியாரும் முழங்குகின்றது.

நாட்டிற்கே பெருமை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், இளங் கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ என்னும் இரண்டு மன்னர்கள் ஓரிடத்தில் வீற்றிருந்தனர். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அங்கு சென்றார். அவர், இளங்கண்டீரக்கோவை மட்டுமே வணங்கிப் பாராட்டினார். உடனிருந்த இளவிச்சிக்கோ, “ஏன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை?” என்று புலவரைக் கேட்டான். அவனுக்கு அவர் கூறிய பதில் வருமாறு:

“இளவிச்சிக்கோவே பண்டைக் காலந்தொட்டே கண்டீரக் கோவினுடைய நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். பாடும் புலவர் வந்துவிட்டால் பாராட்டிப் பரிசு தந்தனுப்புவார்கள். ஆண்கள் மட்டும் அல்லர் - பெண்களும் அத்தகையோரே தன் கணவர் வெளியூருக்குச் சென்றிருக்கும்போது புலவர்கள் வந்துவிடின், கணவர் வரும்வரையும், வந்தவரைக் காக்க வைத்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/21&oldid=1104125" இலிருந்து மீள்விக்கப்பட்டது