பக்கம்:வாழும் வழி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வாழும் வழி


தொண்டு செய்வதற்கும் முடியாமற் போனதே. அவ் விருந்தினரைக் கண்டதும் உணவு முதலியவற்றால் மகிழ்வித்தற்கின்றி நம் கணவர் மனம் என்ன பாடுபடுகின்றதோ அங்கு” என்றெல்லாம் பல எண்ணிக் கவன்றாள். இதனை,

“அருந்து மெல்லடகு யாரிடம் அருந்துமோ என்றழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறு மோஎன விம்மும்
மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கென மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித் திடவும்ஆண் டெழாதாள்”

என்னும் கம்பரின் உருக்கமான பாடலால் அறியலாம். தமிழ்ப் பண்பாட்டில் ஊறி வளர்ந்து வாழ்ந்த கம்பர், சீதையின் வாயிலாக விருந்தோம்பியதை வற்புறுத்தியதில் வியப்பொன்றும் இல்லையன்றோ?

பெண்டிர் திறமை

கண்ணகியும் சீதையும் விருந்தோம்பாது போயினும் தம்மால் முடியாது போனமைக்கு வருந்தியாவது இருப்பது மிகவும் போற்றிப் புகழ்தற்குரியதாகும். சிறந்த பெண்களின் இலக்கணம் இதுவே. தாங்கள் எவ்வளவு எளிய நிலையில் இருப்பினும், தம்மை நாடி வந்தவர்களை உதறித் தள்ளாமல் மகிழ்விக்கும் மனப்பான்மையும் திறமையும் பெண்டிர்க்கு இருத்தல் இன்றியமையாததாகும்.

வீட்டில் ஒன்றும் இல்லை. உணவு தண்ணீரே! அதுவும் ஒரு நாளைக்கு ஒரு குடத்திற்கு மேல் மறு குடத்திற்கு வழியில்லை; இந்நெருக்கடியான நேரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/20&oldid=1104122" இருந்து மீள்விக்கப்பட்டது