பக்கம்:வாழும் வழி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

25


‘பொருளாதார அவை’, ‘சமூக அவை’ என்னும் இரு சபைகளை அமைத்துப் பொருளாதார சமூக திட்டங்களைக் கவனித்து வருகிறது. உலகத்தில் ஏற்படும் குற்றங்குறை சண்டை சச்சரவுகளை மேற்பார்வையிட்டுத் தீர்ப்பு வழங்க, ‘அனைத்துலக நீதிமன்றம்’ ஒன்றையும் இது அமைத்துள்ளது. மற்றும் கொரியப் போர், ஈரான் எண்ணெய்த் தகராறு, காங்கோ சிக்கல் முதலியவற்றில் இந்த ஐ.நா.வின் ஈடுபாடு எத்தகையதென்பதை உலகறியும்? இதில் எல்லா நாட்டினரும் பங்கு கொள்வார்களேயானால், இதுவும் நேர்மையான முறையில் நடக்குமேயானால், கூடிய விரைவில் உலகம் ஒன்றுபடும் என்பது உறுதி ஆனால் அதுதான் ஐயம்! இதற்குத் தக்க காரணமும் கூறுவேன்:

‘ஒரு கண் கெட்ட பின் சூரிய வணக்கம்,!’ ‘திருட்டுப் போனபின் அறைக்குப் பூட்டு’ - என்ற முறையில்தான் இந்த ஐ.நா.வும் தோன்றியது. இரண்டாவது உலகப் பெரும்போரில் எத்தனை உயிர்க்கொலை எத்தனை அழிவு வேலைகள் எத்தனை இழப்புகள் எத்தனை தொல்லைகள்! அப்பப்பா சொல்லுந்தரமன்று! போர் முடிந்தது. சில நாடுகள் தோற்றன; சில நாடுகள் வென்றன. இருவகை நாடுகளுமே மேற்கூறிய துன்பங்களுக்குக் குறியானவைகளே. கிட்டத்தட்ட உலகத்தையே வறுமை சுவைத்துப் பார்த்தது. ஆராய்ந்து பார்த்தார்கள் உலக அறிஞர்கள் சிலர்; ஒரு முடிவுக்கு வந்தார்கள்; ஐ.நா. வைத் தொடங்கினார்கள்; திட்டங்களைத் தீட்டினார்கள். இதைத்தான் யான் முதலில் விவரித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/27&oldid=1104144" இருந்து மீள்விக்கப்பட்டது