பக்கம்:வாழும் வழி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
ரா.தேசிகப் பிள்ளையவர்கள், B.A., B.L.,

தமிழ்-பிரெஞ்சு ஆராய்ச்சித்துறைத் தலைவர்

பிரெஞ்சு கல்வி கலைக் கழகம் (பிரான்சு), புதுச்சேரி.

திருவாளர் சுந்தர சண்முகனார் ஒரு புலவர் - வண் புலவர். புலவர்க்குரிய இலக்கணங்கள் அனைத்தும் கொண்டு திகழும் இவ் அறிஞர் வாழும் வழி என்னும் நூலினை யாத்துத் தமிழ் மக்களுக்கு இதுபோது வழங்குகின்றார்.

உள்ளக் கிளர்ச்சிகளை நன்கறிந்து, உணர்ச்சிகளைச் செழுமையாக்கி, அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறி, அவர்தம் மனத்தை ஈர்க்கச் செய்பவர்தாம் புலவர்பாழ்வறிந்த புலவர். வாழும் வழி கூறும் இந்நூலின் வாயிலாக, புலவர் பல இடங்களில் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டிவிடுகிறார்; சிந்தனையால் பொருளுண்மை தோன்றச் செய்கிறார். ஒன்றைக் காணுந் திறனும், அதனை ஆராயும் ஆற்றலும், பின்னர் அதனைச் சரியாக உணர்ந்துகொள்ளும் உரனும், இவ்வாசிரியரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பவர்க்கு உண்டாகக்கூடும்.

மாந்தர் படித்து உணர்வு பெறத்தக்க முறையில் புலவர் சுந்தர சண்முகனாரின் வாழும் வழி அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நூல் நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/5&oldid=1103443" இருந்து மீள்விக்கப்பட்டது