பக்கம்:வாழும் வழி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வாழும் வழி


12 - நாகன்தேவனார், 15 - கோதமனார், 17-முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், 18 - ஆசிரியர் நல்லந்துவனார், 19 கீரந்தையார், 30 -பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 - உருத்திரசன் மகண்ணர், 39 உறையூர் முதுகூற்றனார், 46 - அக்காரக்கனி நச்சுமனார், 49 - தேனீக்குடிக்கீரனார், 53 - ஆலங்குடி வங்கனார்.)

(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8. மாமூலனார், 20.சிறு மேதாவியார், 33 - நரிவெரூஉத்தலையார், 40 இழிகட் பெருங்கண்ணனார்)

(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கியிருக்கிறார். (22 - தொடித்தலை விழுத்தண்டினார், 44 - களத்தூர்க்கிழார்)

(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)

(5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே சொந்த அறிவு அநுபவங்களின் துணைகொண்டே செய்தார். (7- நக்கீரனார்)

(6) திருக்குறளின் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதிதான் வீட்டுப்பால் (20 - சிறு மேதாவியார்)

(7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப்படுத்தி அமைத்தல். (33-நரிவெரூஉத்தலையார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/50&oldid=1104951" இலிருந்து மீள்விக்கப்பட்டது