பக்கம்:வாழையடி வாழை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

‘வாழையடி வாழை’


"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடி மட்டத்தில் அள்ளி நுகர்வன இன்பத்தை!"

"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் —அடடா நாம் மீன்களல்லவே!"

"கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன். பிற்பகுதியும் கேள்.”

  • நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கிவிட்டது.”

“மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல் நீராடின.’ —காதல் வாழ்வு: ஐந்து


“தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!’

‘இறக்கமாட்டேன் அத்தான்! உன்னை விட்டுப் பிரியவில்லை, என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்.’

"கடமை என் வாயை அடைக்கிறது." “என் மடமை கிடந்து துடிக்கிறது." "மடமை அல்ல; உயிரின் இயற்கை." “தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான் என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது; உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை..’ —காதல் வாழ்வு: எட்டு


கவிஞர் அவர்களின் 'அமைதி' ஒரு புது முயற்சியாகும். "இச்சிறு நாடகம் நாடக உறுப்பினர் —நடிகர் எவருக்கும் பேச்சில்லாது, நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது," எனக் கவிஞர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போன்றே ஊமை நாடகமாய் அமைந்துள்ளது. 'அமைதி'யில் வீறிடும் செயல்களைக் காண்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/104&oldid=1461278" இலிருந்து மீள்விக்கப்பட்டது