பக்கம்:வாழையடி வாழை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 103

"அடுத்த சிற்றுாரில் நுழைகிறான்; பகலவன் மேற்றிசையில் விழுகிறான். பறவைகள் தழைக்கிளைகளில் அடங்குகின்றன. குடிசைகளில் விளக்கேற்றப் படுகின்றது. பனி புகைகின்றது. ஊரின் பொதுச் சாவடியில் ஒரு கிழவி மேலாடையின்றித் தன் கையால் மெய் போர்த்துக் குளிரால் நடுங்கியபடி மூலையில் ஒண்டியிருக்கிறாள். மண்ணாங்கட்டி காணுகிறான். அவன் முகம் துன்பத்தை யளாவுகின்றது.” —அமைதி: நான்கு


நாடக நிகழ்ச்சி போல் நெஞ்சக் கடலில் நினை வலைகள், அடிக்கடி ஒன்றன்பின் ஒன்றாகக் காட்சிகள் தொடரும் திரைப்படம் போன்று, நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டு போகும் கலை, கவிஞர்க்கு நன்கு கைவந்த கலை என்பதைப் பின்வரும் பாடற் பகுதி கொண்டு அறியலாம்.

'நெஞ்சத்தில் அவள் வந்தாள்: கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்க்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்; பூ மலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவன்தன் கோபம்
மிகலாபம் விளைத்ததன்றாே என்ற னுக்கே!
அஞ்சுகமே வா! என்று கெஞ்சி னேன் நான்:
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.

—பாரதிதாசன் கவிதைகள் 1; கற்பனை உலகில்: 2


இவ்வாறாகக் கவிதைக் கலையின் கவினை வகையுறக் கண்ட கவிஞரேறு பாரதிதாசனாரின் கவிதைகள் தமிழ் உள்ளளவும் நிலைத்து வாழும். அவருடைய மறைவு குறித்துப் பேராசிரியர் 'டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் குறிப்பிடும் கருத்துகளை ஈண்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/105&oldid=1461279" இலிருந்து மீள்விக்கப்பட்டது