பக்கம்:வாழையடி வாழை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

‘வாழையடி வாழை’


தருதல், உள்ளபடியே அவர் தம் கவிதைச் சிறப்பின் சிறந்த நிலையினைப் புலப்படுத்துவதாகும். அப்பகுதி. வருமாறு:

“புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்திய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறியாமல், பாரதிதாசனார் ஒருவரையே குறிக்குமாறு: தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் யெற்றுவிட்டார். சிறந்ததை மிக மிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிக மிக வெறுத்துத் துாற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டிற் புகுந்து சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துக்களையும் கடிந்து பாடி, படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுகளில் விழுமிய கற்பனையும் உண்டு; வேகமான உணர்ச்சியும் உண்டு. பழந்தமிழ் மரபும் உண்டு; புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர் வாழ்வுக்கு அவர்தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன. அவர் பிரிவு தமிழினத்துக்குப் பெரிய இழப்பாயிற்று.”

இதுகாறும் கூறியவற்றால், பாவேந்தர் பாரதிதாசனார் தமிழ் இலக்கியவரலாற்றில் நிலையான இடம் பெற்று வாழும் கவிஞர் என்பது நன்கு விளங்கும். கால வெள்ளத்தையும் கடந்து வாழும் அவருடைய கவிதைகள் சிந்தையை மகிழ்விக்கும் வற்றாத செந்தமிழ்க் கருவூலங்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/106&oldid=1461280" இலிருந்து மீள்விக்கப்பட்டது