பக்கம்:வாழையடி வாழை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. நாமக்கல் கவிஞர்
திரு. வே. இராமலிங்கம் பிள்ளை


கி. பி. 1888ஆம் ஆண்டு, அக்டோபர்த் திங்கள், 29ஆம் நாள், போலீஸ் துறையில் பணியாற்றிய 'வெங்கடராம பிள்ளை’க்கும் அவர் மனைவியார் 'அம்மணி அம்மாளு'க்கும் பிறந்தவர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள். ஏழு பெண்களுக்குப் பிறகு பிறந்த முதல் ஆண் மகன் ஆனதால், இவர் செல்வமாக வளர்க் கப்பட்டார். இளமையிலேயே ஓவியக் கலையிலும் கவிதைக் கலையிலும் ஈடுபட்ட இவர், தம் தந்தையார் பணியாற்றிய போலீஸ்துறை வேலைக்குப் போவதனை வெறுத்தார். இதனால் தந்தையாரோடு மனவேறுபாடு கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இவர், பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுத் தாலுக்கா அலுவலக வேலையும், ஆசிரியர் வேலையும் பார்த்தார். பின்னர்த் தம் மனத்திற்கிசைந்த ஓவியக் கலையினையே பணியாக மேற்கொண்டார். கல்வி கற்கும் நாளில் கல்லூரி முதல்வர் எலியட்டுத் துரையிடம் பெற்ற பரிசுப் பட்டியல், 'ஐந்தாம் ஜார்ஜ்' அரசர் வரையில் பரிசு பெறும் நிலைக்கு நீண்டது. மகாகவி பாரதியாரும் ஒருமுறை இவரிடம் 'பிள்ளைவாள்! நீர் நம்மை ஒவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டு வோம்,’ என்று, இவர்தம் ஓவியக்கலைத் திறமையை உளம் உவந்து பாராட்டியுள்ளார்.

ஓவியக்கலையில் மட்டுமின்றிக் காவியக் கலையிலும் கவிதைக் கலையிலும் திரு. இராமலிங்கம் பிள்ளை வல்லவர் என்பதை முன்பே குறிப்பிட்டோம். ஒவியக்கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/107&oldid=1461281" இலிருந்து மீள்விக்கப்பட்டது