பக்கம்:வாழையடி வாழை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

‘வாழையடி வாழை’

யினைப் பாராட்டிய பாரதியாரே இவரை, "பலே பாண்டியா! பிள்ளை! நீர் ஒரு புலவர்; ஐயமில்லை,” என்று இவரைப் புலவரென மதித்துப் பாராட்டியுள்ளார்.

தொடக்க நாட்களில் அக்காலத்தில் நாடகத்துறையில் நற்பெயரும் புகழும் ஈட்டிய 'கிட்டப்பா'வின் நாடகங்களுக்கு இவர் திரைச் சீலைகளும் (Scenes) பாடல்களும் எழுதிக் கொடுத்துள்ளார்.

கவிஞர் பிறந்த காலத்தில் நாடெங்கும் அரசியல் கொந்தளிப்பு நிலவியது. அடிமைத்தளையை வேரோடு அறுத்தெறிய வேண்டுமென்று அண்ணல் காந்தியின் தஜலமையில் மக்கள் கிளர்ச்சி செய்து வந்தார்கள். இந்த விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்புக் கொண்டார் கவிஞர். காந்தியக் கருத்துக்கள் கவிஞர் நெஞ்சில் ஊன்றின. நம் நாட்டு விடுதலை வரலாற்றில் காந்தியடிகள் நடத்திய தண்டி உப்புச் சத்தியாக்கிரகம் பெயர் பெற்றது. தமிழ் நாட்டில் அதே நேரத்தில்' ராஜாஜி' அவர்கள் தலைமையில் வேதாரணியத்தில் உப்புக் காய்ச்ச ஒரு தொண்டர்படை சென்றது. அந்த நாட்டு விடுதலைத் தொண்டர்கள், கவிஞர் அவர்கள் எழுதிக் கொடுத்த பின்வரும் பாடலைப் பாடிச் சென்றனர்.

'கத்தியின்றி ரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை(சத்)
நம்பும் யாரும் சேருவீர்!”
'ஒண்டி அண்டிக் குண்டு விட்டு
உயிர்ப றித்த லின்றியே
மண்ட லத்தில் கண்டி லாத
சண்டை யொன்று புதுமையே’ (கத்)
'குதிரை யில்லை யானை யில்லை
கொல்லும் ஆசை இல்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/108&oldid=1461282" இலிருந்து மீள்விக்கப்பட்டது