பக்கம்:வாழையடி வாழை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 107

எதிரி யென்று யாரு மில்லை
எற்றும் ஆசை யில்லதாய்’ (கத் )
'கோப மில்லை தாப மில்லை
சாபங் கூறல் இல்லையே
பாபமான செய்கை யொன்று
பண்ணு மாசை யின்றியே (கத்)
'கண்டதில்லை கேட்டதில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டை செய்த புண்ணியம்ப
லித்த தேநாம் பார்த்திட (கத்)
'காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே.” (கத்)

இந்தப் பிரசித்தி பெற்ற பாட்டுத்தான் நாமக்கல் கவிஞரை நம் தமிழ்மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தி வைத்தது. எவரையும் எளிதிற் புகழ்ந்து விடாத ராஜாஜியும், இந்தப் பாட்டுத் தொண்டர்களுக்கு ஊட்டிய, உற்சாகத்தினை நேரில் உணர்ந்து, "இந்நேரம் பாரதி யார் இல்லையே என்று எண்ணினேன்; ஆனால், அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்!" என்று கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இவ்வளவு புகழ் பெற்ற கவிஞர் அவர்கள், அடக்கமே உருவானவர்கள்; அறநாட்டம் மிகுந்தவர்கள். பண்பும் பணிவும் அன்பும் அறிவும் நிறைந்தவர்கள், ‘தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவன் பிறரால் உயர்த்தப்படுவான்,' என்பது புனித ஏசு நாதரின் திருவாக்கு. அக் கூற்றிற் கிணங்கக் கவிஞர்,

‘பாரதி பாட்டைக் கண்ட
பழையஇத் தமிழர் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/109&oldid=1461283" இலிருந்து மீள்விக்கப்பட்டது