பக்கம்:வாழையடி வாழை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

‘வாழையடி வாழை’


மேலும், புலமைக்காய்ச்சல் என்பதின்றிப் புலவரைப் புலவரே பாராட்டிப் பாடும் பண்பு மேம்பாட்டினையும் இப்பாடலில் நாம் காண்கின்றாேம்.

இனிய இசைப்பாடல்களை இயற்றி இசைத் தமிழிற்கும் ஏற்றமான தொண்டினை நாமக்கல் கவிஞர் நலம்பட ஆற்றியுள்ளார்:

'தாயே வந்தனம்—இந்தியத்
தாயே வந்தனம்’

'சுதந்திர சூரியன் உதிக்கிற நேரம்
தூங்கா தேதமிழா!’

'நல்ல சமயமடா!—இதை
நழுவ விடுவாயோ?”

'தமிழ னென்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!’

'கொடி பறக்குது கொடிபறக்குது
கொடிபறக்குது பாரடா!
கோண லற்ற கோலில் எங்கள்
கொடி பறக்குது பாரடா!’

‘ஆடு ராட்டே சுழன் றாடுராட்டே
 சுழன்று சுழன்றுகழன் றாடுராட்டே!—இனிச்
சுயராஜ்யம் வந்ததென்று ஆடுராட்டே!’
'கொஞ்சும் கிளிமொழிக் கோதையரே நாம்
கூடி யாடுவோம் கோலாட்டம்’

என்னும் இத்தகைய இசைப்பாடல்கள் எளிமையும் இனிமையும் கொண்டு இலங்குகின்றன.

'தமிழில் இசை பாடுவதா !' 'தமிழில் இசைப்பாடல்கள் உண்டா? என்றெல்லாம் கேள்வி எழுந்தபொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/114&oldid=1461287" இலிருந்து மீள்விக்கப்பட்டது