பக்கம்:வாழையடி வாழை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 113

சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன
சம்பந்தம் என்றெவரும் சாதிப் பாரேல்
இங்கேதும் தடையில்லை; ஏற்றுக் கொள்வோம்;
எல்லாமே தமிழ்ப்பாட்டா யிருந்தா லென்ன?
சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமோ?
தங்காமல் தயங்காமல் தளர்ந்தி டாமல்
தமிழ் நாட்டார் இச்செயலைத் தாங்க வேண்டும்!'

—தமிழன் இதயம்: தமிழ் இசை.


என்று, தமிழ் இசை இயக்கத்திற்கு ஆதரவு நல்குகிறார் கவிஞர்.

'கலையென்றால் உணர்ச்சிகளைக் கவ்வ வேண்டும்;
களிப்பூட்டி அறிவினைப்போய்க் கவ்வ வேண்டும்!

என்று கலைக்கு இலக்கணம் கூறும் கவிஞர், கைத் தொழிலின் மேன்மையினை,

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்;
கவலை உனக்கிலை ஒத்துக்கொள்;
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ??

என்ற பாடலில் புலப்படுத்துகின்றார்,

'பாட்டாளி' மக்களின் பசி தீரவும்; பணமென்ற மோகத்தின் விசை தீரவும், கூட்டாளி வர்க்கங்கள் குணம் மாறவும். புதிய சமுதாயம் ஒன்று காண வேண்டும்” என்று, உலகிற்குக் கவிஞர் அறை கூவல் விடுக்கின்றார்,

'மான்சேர மயிலாடக் குயில்பாட மலர்கள்
தேன் சோர மகரந்தம் திசைதோறும் சிதற
மீன்சேரும் சிற்றாேடை மெல்லோசை தவழும்
பூஞ்சோலை அதிலுற்றுப் புளகித்து மகிழ்வோம்:

—தமிழ்த்தேன்: பூஞ்சோலை


வா.—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/115&oldid=1461288" இலிருந்து மீள்விக்கப்பட்டது