பக்கம்:வாழையடி வாழை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

‘வாழையடி வாழை’

என்று பூஞ்சோலையை வருணிக்கும் கவிஞர், சில நேரங்களிலேதான் இயற்கை குறித்துப் பாடுகின்றார். பெரும்பாலும் மக்களைப் பற்றிப் பாடும் கவிஞராகவே இவர் துலங்குகின்றார்,

எளிய சொற்கள், எளிய நடை, எளிய சந்தம் இவற்றினைக் கொண்டு, பொதுமக்கள் விரும்பும் முறையில் இயற்றப்பட்ட காவியமே, 'அவளும் அவனும்’ என்பது. இக்காவியம் கவிஞர் தம் படைப்பில் சீரிய இடத்தினைப் பெறுகின்றது. முதற்கண் 'அவளை’ அறிமுகப்படுத்தி வைக்கும் கவிஞர்தம் கவிதையில்: பாட்டின் சிறந்த பெற்றியினையெல்லாம் ஒருங்கே காணலாம்.

'மான்’ என அவளைச் சொன்னால்
மருளுதல் அவளுக் கில்லை;
‘மீன் விழி உடையா' ளென்றால்
மீனிலே கருமை இல்லை;
தேன்மொழிக் குவமை சொன்னால்
தெவிட்டுதல் தேனுக்குண்டு;
'கூன்பிறை நெற்றி என்றால்
குறைமுகம் இருண்டு போகும்!'

—அவளும் அவனும்:அவள்.


என்று காவியத் தலைவி கமலத்தை நமக்கு அறிமுகப் படுத்துகின்றார். முழுப்பாடலையும் படித்தால் கவிஞரின் கற்பனைச் சிறப்பும் கவிதை நயமும் நன்கு புலனாகும்.

அடுத்து, காவியத் தலைவன் மாதவனே,

'நீண்டன கைகள்: ஆழ்ந்து
நிமிர்ந்தது அகன்ற மார்பு;
தீண்டிடக் கல்லைப் போலத்
திரண்டன இரண்டு தோளும்;
தூண்எனத் தோன்றும் கால்கள்;
துணைதர நடக்கும் பாதம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/116&oldid=1461289" இலிருந்து மீள்விக்கப்பட்டது