பக்கம்:வாழையடி வாழை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 115

ஆண்தகை முற்றும் தக்க
அளவொடு அமையப் பெற்றாேன்’

—அவளும் அவனும்-அவன்


என்று அறிமுகப்படுத்துகின்றார்.

கவிஞர் இக்காவியத்தில் சிலவிடங்களில் பிற மொழிச் சொற்களையும் கையாண்டுள்ளார். "ஓடிய குதிரை உடனே நின்றது. எதையோ பார்த்து எகிறிக் குதித்து மருண்டு வெருண்டு மக்கர் செய்தது”, என்று கவிஞர் 'மக்கர்’ என்ற அரபுச் சொல்லினை ஆண்டுள்ளார்.

கமலத்திற்கும் மாதவனுக்கும் காதல் பிறந்த கதையினைக் கவிஞர்,

'ரயிலில்’, 'மெயிலில் ராத்திரி வண்டியில்
இஞ்சின் முன்னால் இருட்டை விரட்டிடும்
இரண்டு விளக்குகள் ஏககா லத்தில்
தன்னுடைக் கண்களைத் தாக்குதல் போலத்
தகதக வென்று தன்னையே பார்த்தன!
கண்கள் கூசினான்;உள்ளம் களித்தது!’

என்று குறிப்பிடுகின்றார். மேலும், 'இசை' என்பது கருத்துடன் ஓசையும் இசைவது என்றும், 'சங்கீதம்' என்பது ஓசையின் சங்கதி என்றும், 'கவிதை' என்பது கற்பனை உள்ளது என்றும், 'காமம்’ என்பது தேகம் கலத்தல் என்றும், 'காதல்’ என்பது அறிவு உணர்ச்சி ஆன்மாவினோடும் கலந்து போவது என்றும் கவிஞர் விளக்கங் கூறியுள்ளார்.

பெண்ணின் பேரழகினை,

'மகரந் தப்பொடி மிகவும் படிந்து
பொன்னிறம் மிஞ்சிய செந்நிலப் பூவென,
தங்க நிறத்தொரு தாமரை மலர்போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/117&oldid=1461290" இலிருந்து மீள்விக்கப்பட்டது