பக்கம்:வாழையடி வாழை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

‘வாழையடி வாழை’

நிலத்திற் கிடக்கும் நிறங்களை நீக்கி
வான வில்லின் வர்ணம் தீட்டிய
சித்திர மோ! ஒரு சிலையோ! பெண்ணோ!'

என்னும் அடிகளில் வருணித்துள்ளார்.

முழுநிலவினை வருணிக்கும் கவிஞர், அந்நிறை நிலா, அழுகின்ற குழந்தைக்கு அம்புலியாகவும், விளையாடும் சிறுவர்க்கு வீதி வெளிச்சமாகவும், உலாவுகின்றவர்களுக்கு உல்லாச ஒளியாகவும், தெருக் கூத்துக்குத் திரை விளக்காகவும், களியாட்டங்களின் காரணக் கருவியாகவும், கள்ளர்கள் அஞ்சும் காவற் காரனாகவும், காதல் கண்டவர் அமுதக் கலசமாகவும், காமப் பித்தரைக் கருக்கும் கனலாகவும், கலைஞருக்கெல்லாம் கற்பனை ஊற்றாகவும், கலைகளுக்கெல்லாம் கவிதையாகவும், தெய்வம் காட்டும் திருவிளக்காகவும் இருப்பதாக இயைபுணர்ந்து கூறியுள்ளார்.

கவிஞர், 'அவளும் அவனும்' என்னும் காவியத்தில் கையாண்டிருக்கும் உவமைகள் பின் வருவன வாகும்:

முன்விளக் கவிந்த 'மோட்டார் கார்’ என,
டங்குவார் அறுந்த ஜட்கா வண்டிபோல்,
கைத்தடி இழந்த கிழவன் கணக்காய்,
ஊற்றுமை தீர்ந்த பேணுவின் ஒப்பாய்,
தாளம் கெட்ட சங்கீ தம்போல்,

என்றும்,

'மோனம் பலித்த முத்தரைப் போல்’

என்றும்,

'மரணதண் டனையில் மன்னிப் படைந்து
விடுதலை பெற்று வீட்டுக்கு வந்த
குற்ற வாளியின் குதூக லத்துடன்’

என்றும் இவர் ஆண்டிருக்கும் உவமைகளை, சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/118&oldid=1461291" இலிருந்து மீள்விக்கப்பட்டது