பக்கம்:வாழையடி வாழை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 117


லின் செல்வர் 'பேராசிரியர் சேதுப்பிள்ளை' அவர்கள் பாராட்டியுள்ளார்.

'சங்கொலி எழுந்தது! சங்கட மழிந்தது!
தைரியம் கொள்வாய் தமிழ்மகனே!'

என்று சங்கநாதம் செய்யும் கவிஞரை, கவிஞர் திரு. 'பெ. துாரன்’, "காந்தியத்தை இனிய கவிகளால் ஒலிக்கும் தமிழ்ச்சங்கு" என்று பாராட்டுகின்றார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,

'சிந்தனையால் வாக்கதனால் செய்கை தன்னால்
தேசத்திற் கோயாது தொண்டு செய்தோன்’

என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

இவவாறு காந்திய நெறியை தம்மைக் கவர்ந்த நெறியெனக் கொண்டு, காந்தியக் கருத்துகளையே தம் வாழ்நாளில் கவிதை வாயிலாகப் பரப்பிய நாமக்கல் கவிஞர் திரு. வே. இராமலிங்கம் பிள்ளை அவர்களை’ நாம் 'காந்தியக் கவிஞர்' என வழங்குவோமாக! {{block center|<poem>'கன்னி முதல் வேங்கடத் தமிழ்நாடு முழுவதும்

காந்தீய சேவை செய்யக்

களைதீரும் சத்திய சாந்தநெறி பாடிடும்

கவிராம லிங்கன்’

என்று கவிஞர் தாம் வரைந்தனுப்பிய சீட்டுக் கவி பொன்றில் தம்மைக் 'காந்திய சேவை செய்யக் களை தீரும் சத்திய சாந்த கெறி பாடிடும்' கவிஞரெனக் குறிப்பிட்டுள்ளார். காந்தி யுகத்தின் காந்தியக் கவிஞராய் விளங்கும் இவர் கவிதைகள், யாராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய எளிய கவிதை களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/119&oldid=1349977" இலிருந்து மீள்விக்கப்பட்டது