பக்கம்:வாழையடி வாழை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக் கவிஞர் சுரதா 119


தொல்காப்பியனார் உவமை அணி ஒன்றை மட்டுமே சொன்னார். ஏனெனில், பிறவணிகளும் உவமையணியை நிலைக்களமாகக் கொண்டே பிறக்கின்றன. ஆதலால், இவர் அடைப்பெயர்ப் பொருத்தத்தினை முதற்கண் காண்போம்—இவர் கவிதையில் உவமை நயம் பொருத்தமுறக் கிளர்ந்து நிற்பதைக் காணலாம். ஒரு சில காண்போம்:

'தமிழ்மொழிக் குதவும் செல்வம்
தானாக வளர்தல் போலும்
கமழ்நறு மணத்தைப் பூக்கள்
கருவிலே பெற்றாற் போலும்
இமிழ்கடல் வயிற்றின் வெள்ளம்
இயற்கையாய்ப் பெருகும்.’

அடுத்து, கப்பல் நிற்கும் துறைமுகத்தினை மணவறை மீது தோன்றும் மங்கைக்கு ஒப்பிடுகின்றார் கவிஞர்:

'துணையொடு கப்பல் நிற்கும்
துறைமுகம், சுற்றம் சூழ
மணவறை மீது தோன்றும்
மங்கையைப் போன்ற தாகும்.’

அம்மட்டோடன்றி, மேலும் கலமற்ற கடலைக் கணவனை இழந்த பெண்ணிற்கு ஒப்பிடுகின்றார்:

'கணவனை இழந்த பெண்ணும்
கலமற்ற கடலும் ஒன்றே!’

அடுத்து, நன்றாகச் சூல் கொண்டு கருநிறம் பெற்று எழுந்து நாற்புறமும் சென்று வெண்ணில வைச் சூழ்ந்த மேகம், கருங்குழலில் குளிர் முல்லையைச் துடிக்கொண்டிருக்கும் பெண்போல் உளதாம்:

நன்றாகச் சூல்கொண்ட முகிலின் கூட்டம்
நாற்புறமும் வெண்ணிலவைச் சூழ்ந்தாற் போலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/121&oldid=1461293" இலிருந்து மீள்விக்கப்பட்டது