பக்கம்:வாழையடி வாழை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக் கவிஞர் சுரதா 121

'ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்’

என்று கூறியுள்ளார்.

'வன்னிய வீர'னில் வரும்,

'ஆறுபோற் கிடந்த அகல் நெடுங் தெருக்கன்’

என்னும் கவிதைத்தொடர்,

‘யாறு கிடந்தன்ன அகல்நெடுங் தெரு’

என்ற மதுரைக் காஞ்சி'யினை நினைவூட்டும்.

‘பூம்புகார்’ என்ற கவிதையில் வரும்,

'குழைகொண்டு மனையில் மேய்ந்த
கோழியை விரட்டி னோரும்’

என்னும் அடிகள்,

'குழை கொண்டு கோழி எறியும் வாழ்க்கையர்’

என்ற 'பட்டினப்பாலை'த் தொடரினை நினைவுபடுத்துகின்றன.

'வான்கண் விழியா வைகறைப் பொழுதில்’

என்னும் கவிதைத் தொடர்,

'வான்கண் விழியா வைகறை யாமத்து'

என்ற 'சிலப்பதிகார' அடியினை நினைவுபடுத்துகின்றது.

அடுத்து, 'சித்துார்ச் சாம்பல்’ என்ற கவிதையின் இறுதி இரண்டு அடிகளாம்,

'சீரமைந்த மாணிக்க மகுட மங்கை
செத்ததற்குச் செத்திட்டார் சித்துார்ப் பெண்கள்’

என்னும் அடிகள், பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் எதிர்பாராத முத்தத்தின் இறுதி இரண்டு அடிகளாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/123&oldid=1461295" இலிருந்து மீள்விக்கப்பட்டது