பக்கம்:வாழையடி வாழை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

‘வாழையடி வாழை’

'அன்பன் செத்ததற்குச் செத்திட்டாள்
அத்தென்னாட் டன்னம்’

என்னும் அடிகளை நினைவிற்குக்கொண்டு வருகின்றன.

எந்த இலக்கியப் புலவர்க்கும் இல்லாத இலக்கணப் புலமை, கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளில் ஆங்காங்கே கொப்பளிப்பதைக் காணலாம்.


“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’

'வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை’
வெறும்பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்ப தில்லை’

'வெடித்திருந்த வயலெல்லாம் தண்ணி ராலே
மெய்யெழுத்தின் முன்னுயிர்போல் பொருத்திக் கொள்ளீர்”.

மேலும்,

“--------- மெல்லினத்தின்
முன்னிற்கும் வல்லினம்போல்
முன்னின்ற தலைவர்’

எனத் 'திரு. வி. க.' போற்றப்படுகிறார்.

'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை'

என்ற ஒரு கவிதையில் தொல்காப்பியப் பொருளதிகாரத் தொடரையே செய்துள்ளார்.

சிறந்த கவிதை எனப்படுவது, மேலே காட்டார் கருத்துப்படி நான்கு பொருள்களே உள்ளீடாகக் கொண்டிருக்க வேண்டும் என்பர். அவையாவன:

1. உணர்ச்சி (Emotion);

2. கற்பனை (Imaginatian);

3. வடிவம் (Form);

4. பொருள் (அ) உள்ளீடு (Content) என்பனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/124&oldid=1461296" இலிருந்து மீள்விக்கப்பட்டது