பக்கம்:வாழையடி வாழை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக் கவிஞர் சுரதா 125

'மங்களத் தென்றலிலே-கரு
வண்டு மயங்குதடி!
பொங்கி வழிந்திடுதேன்-அது
பூக்களின் வேர்வையடி
வெங்கனல் கோடையடி-இது
வேனிற் பருவமடி!’

'தெள்ளு தமிழுக்குதவு சீலன்’ என்ற 'காவடிச் சிந்து' மெட்டில் ஒரு பாட்டு:

'ஆசை கொண்டு விண்வெளியின் மீது-மதி
ஆடையின்றி யேயுலவும் மாது-முகில்
ஓசைகொண்ட மண்டலத்தில்
ஊர்ந்துலவி வாழ்ந்துவரும்
ஊமை-வெள்ளி
ஆமை;

ஆசிரியப்பாவிலே அழகான வருணனையும் கருத்தும் மிளிர ஆசிரியர் கவிதை யாத்துள்ளதைக் காணுங்கள்; 'அகலியை’ எனும் கவிதையில் 'அகலியை’யை வருணிக்கிறார் கவிஞர்:

'தவஞ்செய் முனிவரின் தரும பத்தினி
பருவ காலத்தில் பழுத்த மாங்கனி
அகலியை என்பாள் அழகின் விளக்கமாம்!
வெண்ணிலா அவளெழில் கண்டு வியக்குமாம்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வதன. வட்டமும் மைவிழி வாசலும்
தூண்டில் புருவமும் துடிக்கும் பருவமும்
நெய்கனிந் திருண்ட நீள்கருங் கூந்தலும்
சேர்ந்து பிறந்த செவ்வா யிதழ்களும்
கையும் காலும் மெய்யும் மேனியும்
எவ்வாறு நன்கமைந் திருத்தல் வேண்டுமோ
அவ்வாறு நங்கைக் கமைந்திருந் தனவாம்
நங்கையின் நடை கண்டு நாணிற்றாம் அன்னம்
கட்டழகு மங்கையின் கன்னத்தைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/127&oldid=1461299" இலிருந்து மீள்விக்கப்பட்டது