பக்கம்:வாழையடி வாழை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

‘வாழையடி வாழை’

அடுத்து வடிவத்தைப் பார்க்கும் பொழுது கவிஞர் ஆசிரியம், அறுசீர்க்கழிநெடிலாசிரியம், விருத்தம், எண்சீர் விருத்தம், கானல்வரிச்சந்தம். கிளிக்கண்ணி, வண்ணம், சிந்து, காவடிச் சிந்து முதலிய பல பா வகைகளைப் பாடியுள்ளார்.

கானல் வரிச்சந்தம் காண்போம்;

முகிலப் பற்றி,

'‘கடலுடல் தொடுபவளே!
கருவொடு வருபவளே!
நெடுமலை துயில்பவளே!
நிதிதரு மலைமகளே!
இடையிடை யிடியுடனே
இருள்நிற எழிலுடனே
கொடு வெயில் துயர்கெடவே
குளிரொடு வந்தனையே!”

என்கிறார். அடுத்தது ஒரு கிளிக்கண்ணி:

'‘மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும் — கிளியே!
போவா ரடிவழுக்கும்!”

அடுத்து வண்ணம்:

'“மாலை அந்தியிலே — மலை
வாழும் தென்றலிலே — தெரு
வாசல் முல்லையின்
வாசம் வந்ததும்
ஆசை கொண்டன வண்டுகள் யாவும்
ஆவேசமாகமலர் ஊதவே.’

'இளவேனில்' என்னும் கவிதையில் 'சிந்து' நடை போடுகிறது.

'‘சங்கத் தமிழ்மதுரை — நகர்
தாண்டித் தவழ்ந்துவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/126&oldid=1461298" இலிருந்து மீள்விக்கப்பட்டது