பக்கம்:வாழையடி வாழை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக் கவிஞர் சுரதா 127

'நகர்ங்கர்’ என்றும், சற்றே
'நகர்நகர்’ என்றும், நீ போய்ப்
'பகர்பகர்’ என்றும் ஓசை’
பரந்தபொன் னகர மாகும்.

ஒசை நயத்தினைக் கீழ்க்காணும் 'தரைமீன்’ என்னும் பாடலிற் காண்க.


'ஒடிக்கொண்டே யிருந்த நதியை நோக்கி
ஓடிக்கொண் டேயிருந்தாள் வாடிக்கொண்டே;
வாடிக்கொண் டேயிருந்தாள் சூறைக் காற்றின்
வசப்பட்ட கப்பலைப்போல் ஆடிக்கொண்டே;
ஆடிக்கொண் டேயிருந்தாள் அழகி ஆற்றின்
அடிநீரில் மறைந்தவனைத் தேடிக் கொண்டே,
தேடிக்கொண்டேயிருந்தாள், ஆதி மந்தி
சிந்தாத கண்ணிரைச் சிந்திக் கொண்டே!’

காதல் நோய் பற்றி வள்ளுவர் "தன்னோய்க்குத் தானே மருந்து" என்றார். கவிஞர் சுரதா அவர்கள் 'இணைமோனை’ என்ற கவிதையில்,

'மருந்தாலே நோய்தீரும்! வானம் சிந்தும்
மழையாலே வறண்டவயல் ஏக்கம் தீரும்!
விருந்தாலே பசிதீரும் ஆனால் காதல்
வெப்பத்தில் கொப்புளிக்கும் நோயோ எந்த
மருந்தாலும் தீர்வதில்லை; காதல் நோயை
மந்திரங்கள் தீர்ப்பதில்லை; மங்கை தீர்ப்பாள்.’

என்கிறார்,

விறலியின் கடனம் பாருங்கள்.

'கொடியேந்தும் நகரினிலே நீல வானம்
குளிரேந்தும் இரவினிலே மின்னும் தங்கப்
படியேந்தும் மண்டபத்தில் ஆட லானேன்
பார்வையினால் கோணங்கள் போட லானேன்.”

மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/129&oldid=1461301" இலிருந்து மீள்விக்கப்பட்டது