பக்கம்:வாழையடி வாழை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

‘வாழையடி வாழை’


பலர்புகழ் மதியே! நின்னைப்
பார்க்கநிம் மதியே!”

என்ற பாடலில் பாட்டோட்டம் காண்க!


'வில்லூரில் விசலூரில் தித்தன் என்பான்
வீற்றிருந்த உறையூரில் வேம்பத் தூரில்
மல்லூரில் பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த
மறைக்காட்டில் குளிர்தூங்கு குற்றாலத்தில்
பல்லூரில் திருடியவன்; இன்றாே காயற்
பட்டினத்தில் அகப்பட்டேன்; வெட்டுப் பட்டேன்
நல்லோரே! நான் நொண்டி யாகி விட்டேன்!
நாற்சீரில் கடைச்சீர் குறைந்தாற் போல!'

'பட்டினத்தார்; துறவற நூல் பாடிவைத்த
பாட்டினத்தார்; மங்கையரோ மேன்மையான
பட்டினத்தார்; தாலாட்டுப் பாடல் பாடும்
பாட்டினத்தார்! பூமானே! ஐயோ, காயற்
பட்டினத்தார்! காப்பியங்கள் இயற்று கின்ற
பாட்டினத்தார்க் குதவிசெய்யும் பட்டினத்தார்
பட்டினத்தார் கொள்கையினைத் தூக்கித் தூக்கிப்
பாட்டெழுதும் நான்நாகைப் பட்டினத்தான்’

என்று தம் ஊரைக் குறிப்பிடுகின்றார் கவிஞர்.

'பாவையைப் பார்த்தீரோ?’ என்று நம்மை வினாவுகிறார் கவிஞர். எப்படிப்பட்ட பாவை அவள்? கவிஞர் வாக்காலேயே கேட்போம்:


'அழகிற் சிறந்திருப்பாள் — குலமகள்
அன்னம் எனநடப்பாள்!
தழுவுங் கொடியிடையாள் — திருவளர்
தாமரை போன்றிருப்பாள்
விழியில் நிலாவளர்ப்பாள் — சுரையின்
விதையது போல்நகைப்பாள்
மழையின் குளிரமுதை — மதுமலர்
மங்கையைக் கண்டீரோ?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/130&oldid=1461302" இலிருந்து மீள்விக்கப்பட்டது