பக்கம்:வாழையடி வாழை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

'வாழையடி வாழை'

தமிழ்த் தாத்தா 'உ. வே. சா.' அவர்களை


‘சாமிநா தைய ரின்றேல்
    சங்கநூல்மறைந்திருக்கும்.’

என்றும், பாஸ்கர சேதுபதி அவர்களை,


“கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்தவர்"

என்றும், மறைமலையடிகளை,


'முல்லைக்கோர் காடு போலும்,
         முத்துக்கோர் கடலே போலும் சொல்லுக்கோர் கீரன் போலும்
         தூதுக்கோர் தென்றல் போலும்
கல்விக்கோர் கம்பன் போலும்
         கவிதைக்கோர் பரணர் போலும்
வில்லுக்கோர் ஓரி போலும்
         விளங்கினர்! வென்றார்! நின்றார்.'

என்றும், பாரதிதாசனுரைப் பற்றி,


காட்டாற்று வெள்ளத்தின் வேகங் கொண்ட,
கவிதைகளாற் பாவேந்தர் புரட்சி செய்தார்.
ஓட்டாண்டிப் பாட்டெழுதி வந்தார்க் கெல்லாம்
ஓய்வளித்தார்! தம்பாட்டால் வாழ்வ ளித்தார்.”

'திருத்தத்தில் வெற்றி பெற்றான் ஒட்டக்கூத்தன்;
        தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன்;
நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்ட னத்தி;
        நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல்;
வருத்தத்தில் வெற்றிபெற்றார் வடலூர் வள்ளல்;
        வாளேந்தி வெற்றிபெற்றான் சேர லாதன்;
விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த
        வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல'.

கடைசி அடியினை நோக்குக, புலவர்தம் மிடுக்கும் செம்மாப்பும் புலனாகின்றனவல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/132&oldid=1338755" இலிருந்து மீள்விக்கப்பட்டது