பக்கம்:வாழையடி வாழை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைக்கவிஞர் சுரதா

131


'திருமுகம்போ லவிழ்ந்த தாமரை'

என இலக்கியத்தில் வருவது போன்றதிது.

இறுதியாகக் கவிஞர் சுரதா அவர்களின் தமிழ்ப் பற்றினைக் கூறிமுடிக் கின்றேன்.


தேன்பிறந்த பின்மலர்கள் பிறப்பதில்லை;
        திசைபிறந்த பின்வானம் பிறப்ப தில்லை;
மீன்பிறந்த பின் குளங்கள் பிறப்பதில்லை;
        வேல்பிறந்த பின் இரும்பு பிறப்ப தில்லை;
தேன் சுரக்கும் தமிழ்பிறக்கும் முன்பே, மற்றத்
        தேசத்தார் பேசுமொழி பிறக்க வில்லை;
வான்பிறக்கு முன்காற்றுப் பிறந்த துண்டோ?
        வையகத்தில் தமிழ்போலும் சிறந்த துண்டோ?”

'மாந்தரெலாம் உணவினிலே இன்பம் காணின்
        மாகவிஞன் இன்பத்தில் உணவு காண்பான்;
தீந்தமிழ் போல் பிறமொழிகள் இனிப்ப தில்லை'

இவ்வாறாக. இன்று வாழும் கவிஞர்களில், சுரதா அவர்கள் செம்மை சான்ற கவிஞராய்த் துலங்கி வருகின்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/133&oldid=1338766" இலிருந்து மீள்விக்கப்பட்டது