பக்கம்:வாழையடி வாழை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

‘வாழையடி வாழை’

'விடிந்தது கண்ணே!’ என்றான்
விழித்தவன் காதில் அச்சொல்
‘ஒடிந்தது வீணை” என்றே ஒலித்தது!

கவிஞரின் இக்கற்பனை,

‘குக்கூவென்றது கோழி யதனெதிர்
துட்கென்ற தென்தூய நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே'

— குறுந்தொகை : 157


என்ற குறுக்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு மகிழத் தக்க தாகும்.

மாங்கனியைக் காணாத அடலேறு கொள்ளும் வருத்தத்தினைக் கவிஞர்,


“குளம்மட்டும் இருந்ததங்கே; குமுதம் இல்லை;
குலைக்காம்பு நின்றதங்கே; கனிகள் இல்லை;
களம்மட்டும் இருந்ததங்கே வாளைக் காணோம்!”

என்று உவமையழகு சிறக்க அவலத்தினை வார்த்தைகளில் வடித்துள்ளார்.

'பொன்னர் திருவே! புதுநிலவே! தண்மேனி
மின்னே! கனவின் வியனுருவே! எங்குற்றாய்?”

என ஏங்கிக் காதலி துடிக்கும் பொழுது அவலம் கொப்பளிக்கின்றது.

'வானத்து வெண்மதிக்கு வையத்துக் காதலின்ப
ஞானத்தை ஓதிவர நத்திப் பறந்தனை யோ!
'கூட்டில் உயிராடக் குமையுமனங் கொதிப்பேற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/138&oldid=1461305" இலிருந்து மீள்விக்கப்பட்டது