பக்கம்:வாழையடி வாழை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசர் கண்ணதாசர் 139


'வாடுவாள் என்னை மனத்தி லிருத்தி:
பார்த்த துண்டோ?’

என்று காதலன் கூறுவதாகத் தலைவி எண்ணும் எண்ணம் 'தலைவி மயக்கம்' என்ற கவிதையில் காணப் படுகின்றது.

'தளிர், இலை, பழுப்பு, சருகு’ என்னும் தலைப்பில் 'சருகானாள்' என்று கவிஞர் பாடியுள்ள கவிதை புலமைச் சிறப்புப் பொருந்தியது.

'இரவே போதும்!' என்ற கவிதையில், 'வேலைவெல்லும் விழிபடைத்த மடவன்னம் தரையைப் பார்க்கும்' என்றும், 'பூக்காடு வான்பார்க்கத் தலையைச் சாய்த்தாள்' என்றும், வதனத்தைத் தொடுமுன்னர் விழியைச் சாய்த்தாள்’ என்றும், கவிஞர் தலைவியின் நாணத்தினைச் சுட்டியிருப்பது நனிநயம் பயப்பதாகும்.

ஆசைக்கு நாணமொரு தடையா? காதல்
அனலுக்கு வெட்கமொரு சுவரா?”

என்ற பகுதியில், காதல் வெள்ளம் கரை புரண்டால் தடையுடைத்து மீறும் என்பது புலப்படுத்தப்படுகின்றது.

மணமக்கள் வாழ்த்தாகக் கவிஞர் பாடியுள்ள 'பாடாய் தும்பி!’ என்ற பாடலில்,

'குயிலும் மயிலும் நிலவும் தென்றலும்
கோடிநாள் புலவர் கூறிடும் வார்த்தைகள்;
குயில்மொழி மயில்நடம் குளிர்பூந் தென்றல்
குடும்பந் தானெனக் கூறாய் தும்பி!’

என்று, கவிஞர் நல்ல குடும்பத்தினை நம் கண்முன் கொணர்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/141&oldid=1461308" இலிருந்து மீள்விக்கப்பட்டது