பக்கம்:வாழையடி வாழை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

‘வாழையடி வாழை’


'கலையா வாணன்’ என்று, கலைவாணர் என். எஸ். கே மறைவிற்கு வருந்தியெழுதிய இரங்கற்பாவில்,

'இளமையில் மாண்டான், என்றும்
இளமையாய் வாழ எண்ணி!”

என்றும்,

சிறியனாய் மறைந்தா னேனும்
சிறுமையில் மறைந்தா னில்லை’

என்றும் கூறும் கூற்றில் பொருளாழம் புதைந்திருக்கக் காணலாம்.

நாதசுரமேதை திரு. 'இராசரத்தினம்' மறைவு குறித்துப் பாடியுள்ள பாடலில், 'சேயினை இழந்த மாதர் சிந்தையின் நடுக்கம்போல' இரங்கும் கவிஞர்,

'செவியினில் ஓடி, எங்கள் சிந்தையில் ஓடி, இந்தப்,
புவியெலாம் ஓடி, நின்பாற் பொங்கிய 'தோடி' வேறிங்
கெவரிடம் போகும்?'

என்று பாடும் பாடலில் பொருள் நயமும், பாட்டோட்டமும் அமைந்திருக்கக் காணலாம்.

இரவின் வருகையினைக் கவிஞர் வருணிக்கும் பொழுது, அவர்தம் கவிதை சிறந்து துலங்கக் காணலாம்:


'மாலைஇளங் கருக்கல் வையந் தழுவிவர
சோலைக் குயில்கள் சுதியடங்கிக் கூடடைய
வாலைப் பருவமகள் மெளனநடை போட்டதுபோல்
சேலை நடிக்கவரும் தென்றல் குழைந்தசைய
வெங்கதிரைப் போக்கியபின் வெண்ணிலவு
முன்னெழும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/142&oldid=1461309" இலிருந்து மீள்விக்கப்பட்டது